×

'வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!': விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்..முதல்வர் ஸ்டாலின் ட்வீட்..!!

சென்னை: விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்! கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிந்து என்ற மாணவி சென்னை திநகரில் உள்ள வித்யோதயா பெண்கள் பள்ளியில் பயின்று வருகிறார். ஒரு சிறப்பான கைபந்து வீராங்கனையாக இருந்து வந்த சிந்து, கடந்த 2020ம் ஆண்டு எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். விபத்தில், பற்கள் அனைத்தும் விழுந்துள்ளது. அத்துடன் அவருக்கு கால், முகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 அறுவை சிகிச்சைகள் வரை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்திற்கு பிறகு அவர் முழுவதும் கட்டிலில் படுத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும்  கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெற்று தற்போது நடைபெறும் பொதுத்தேர்வில் இவர் உதவியாளர் ஒருவரின் உதவியுடன் தேர்வை எழுதி வருகிறார். நான் மறுபடியும் நடக்க தொடங்கினால் கைப்பந்து விளையாட்டை விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலைலேயே சிந்துவை புகழ்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.


Tags : Sindhu ,Stalin , Accident, leg bone, exam, student Sindhu, Chief Stalin
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்