×

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று கன்னியாக்குமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பதூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : southern Andaman Sea ,Bay of Bengal ,Chennai ,Meteorological Center , Depression will form in the southern Andaman Sea in the Bay of Bengal today: Chennai Meteorological Center
× RELATED தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது ஒன்றிய...