புல்டோசர் டயர் வெடித்து 2 ஊழியர்கள் பலி

ராய்ப்பூர்: புல்டோசரின் டயருக்கு காற்றடித்த போது திடீரென வெடித்து, 2 ஊழியர்கள் உடல் சிதறி பலியாகினர். சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் சில்தாரா தொழிற்சாலை பகுதி உள்ளது. இங்குள்ள மெக்கானிக் ஷெட்டில் கடந்த 3ம் தேதி புல்டோசர் ஒன்றின் பிரமாண்ட டயர் பழுது பார்க்கப்பட்டது. பின்னர், அந்த சக்கரத்தின் மீது ஒரு ஊழியர் அமர்ந்து கொண்டு, டயருக்கு காற்றடித்தார். அப்போது, மற்றொரு ஊழியர் வந்து காற்று ஏறி இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக, டயரின் மீது அமர்ந்து அழுத்தி, அழுத்தி பார்த்தார். டயரில் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக காற்று ஏறி இருந்த காரணத்தால், அந்த டயர்  திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், டயரின் மீது அமர்ந்து காற்று பிடித்து கொண்டிருந்த ஊழியரும், டயரை அழுத்திப் பார்த்த ஊழியரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர். இருவரும் அதே இடத்தில் பலியாகினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: