×

சிஎஸ்கே பிளே ஆப்... பெருங்கனவு

மும்பை: ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 14 தொடர்களில் சிஎஸ்கே 12 முறை விளையாடி உள்ளது. எஞ்சிய 2 முறை சூதாட்ட புகார் காரணமாக விளையாடவில்லை. அந்த 12 தொடர்களில் 11 முறை, முதல் 4 இடங்களுக்குள் வந்துள்ளது.  மேலும் 9 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அவற்றில் 4 முறை கோப்பை வென்று சாதித்துள்ளது. சிஎஸ்கே ஒரேஒரு முறை அதாவது 2020ம் ஆண்டு மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் 7வது இடத்தை பிடித்தது. இப்போது 15வது தொடரில் சிஎஸ்கே 13வது முறையாக விளையாடுகிறது. இந்த முறையும் பரிதாப நிலைமையில்தான் இருக்கிறது.

இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. பேருக்கு கேப்டனாக இருந்த ஜடேஜாவை மாற்றி, டோனி மீண்டும் கேப்டன் பொறுப்பு ஏற்றப் பிறகும் நிலைமை மாறவில்லை. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றாலும் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவுதான். வேண்டுமானால் புள்ளிப்பட்டியலில் உள்ள வரிசை மாறலாம். அதற்கும் டெல்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகளை வெல்ல வேண்டும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து, அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் சென்னையின் பிளே ஆப் என்ற ‘பெருங்கனவு’ நினைவாகும். விளையாட்டில் எதுவும் நடக்கலாம்.

* தமிழக வீரர்களுக்கு....!
நான்கைந்து தொடர்களாக, ஆடும் அணியில் தமிழக வீரர்களுக்கு டோனி வாய்ப்பு தருவதில்லை. சையத் முஷ்டாக் அலி தொடரில் அசத்திய செழியன் ஹரிநிஷாந்த், நாரயண் ஜெகதீசன் ஆகிய 2 வீரர்களும் வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இனியும் ‘தமிழக வீரர்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பளிப்பாரா’ என்பது சந்தேகம்தான்.


Tags : CSK , CSK Play Off ... Dream
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி