எல்ஐசி பங்குகள் ஞாயிறன்றும் விற்பனை

புதுடெல்லி: எல்ஐசி பங்குகளை சனி, ஞாயிறுகளிலும் விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சுமார் ரூ.21,000 கோடி திரட்ட 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்கள் வெளியிடப்பட்டன. கடந்த 4ம் தேதி பொது பங்கு விற்பனை தொடங்கியது.  ஒரு பங்கு ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பங்கு விற்பனை நடந்தது. நேற்று மாலை நிலவரப்படி 16,20,78,067 பங்குகளை வாங்குவதற்கு, 16,25,35,125 பேர் ஆர்வம் காட்டியுள்ளனர். ஐபிஓ பங்கு விற்பனை வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.  நாளை 7ம் தேதி சனிக்கிழமையும்  பங்கு விற்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை மறுநாள் ஞாயிற்று கிழமைகளிலும் எல்ஐசி ஐபிஓ விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: