தமிழகம் முழுவதும் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் சோதனை

மதுரை: மதுரையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி,  10 கிலோ அழுகிய கோழிக்கறியை பறிமுதல் செய்தனர். 5 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் காஞ்சிபும், திருப்பூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கேரளாவில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு, ஒரு மாணவி பலியானார். இச்சம்பவம் நாடு முழுக்க அதிர்வினை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரையில் ஜெயராம் தலைமையில் குழு, குழுவாக பிரிந்து முக்கிய இடங்களின் அனைத்து ஷவர்மா கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினர். 52 கடைகளில் 30க்கும் அதிக குழுவினராக பிரிந்து இந்த அதிரடி சோதனையில் தனித்தனியாக ஈடுபட்டனர்.

ஷவர்மா முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் சில கடைகளில் கெட்டுப்போன பழைய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, 5 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பல்வேறு கடைகளில் இருந்தும் 10 கிலோ அளவிற்கான அழுகிய கோழிக்கறியையும் பறிமுதல் செய்தனர். இதே போல காஞ்சிபும், திருப்பூர் உட்பட பல  மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் கூறும்போது, ‘‘விதிமீறலுடன் இருந்த 5 கடைகளுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. 10கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.’’ என்றனர்.

Related Stories: