வடசென்னை பகுதியில் ரூ.198 கோடியில் புதிய கழிவுநீர் குழாய்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சட்டப் பேரவையில் பல்வேறு எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களால் சில காலம் தொய்வு ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு வருகிறது. மதுரை உள்பட 10 நகரங்களிலும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவு நீர் குழாய்களை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.198 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் வட சென்னையில் எங்கும் கழிவுநீர் தேங்காது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: