உலகின் நம்பர் 1 நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் செயல்படுகிறார்; தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: உலகின் நம்பர்-1 நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் இன்று தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, உலகின் நம்பர்-1 நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும், அதனை அவர், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

Related Stories: