நெதர்லாந்தில் நடக்க இருக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்க குமரி போலீசார் தேர்வு

நாகர்கோவில்: தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2ம்தேதி  நடைபெற்றது. இதில்  நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்  போட்டிகளில் குமர மாவட்டத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் திலீபன் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கமும், பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், டிரிபிள் ஜம் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம் போட்டிகளில் 3 தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கமும், முதல் நிலை காவலர் டேவிட் ஜான் 3000 மீட்டர்  ஓட்டத்தில் தங்க பதக்கமும் பெற்றனர்.

இந்த தடகள போட்டிகளில் பரிசுகள் பெற்ற போலீசாரை, எஸ்.பி. ஹரி கிரன் பிரசாத் பாராட்டினார். மேலும் உதவி ஆய்வாளர் திலீபன் மற்றும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா ஆகியோர் நெதர்லாந்தில் நடைபெறும் உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் தேர்வாகி இருப்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: