×

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை திடீரென நிறுத்திய தாலிபான் அரசு: மகளிர் அமைப்புகள் கண்டனம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை திடீரென தாலிபான் அரசு நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் மீண்டும் ஆட்சியை பிடித்ததில் இருந்து பெண்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றனர்

சமீபத்தில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தாலிபான் அரசு தடை விதித்தது. இந்த சம்பவம் உலகளாவிய கண்டனத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கூடாது என்று ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண்கள் கார்களில் பயணிக்கலாம் தவிர பெண்கள் வாகனங்களை ஓட்ட கூடாது என தலிபான் அரசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க தாலிபான்கள் மறுத்துவிட்டன. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டதற்கு மகளிர் அமைப்புகள் எதிரிப்பு தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் அடுத்த தலைமுறை பெண்களுக்கு தற்போது அவர்களது தாய்க்கு உள்ள வாய்ப்புகள் கிடைக்க கூடாது என்பதில் தாலிபான்கள் உறுதியுடன் இருப்பதாக அவர்கள் குற்றம் சாடுகின்றனர்.


Tags : Taliban government ,Afghanistan , Afghanistan, Driving License, Taliban Government, Women's Organizations
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி