×

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்: டெல்லியில் அறிமுகம்

புதுடெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.  இதில், கட்டிட மேஸ்திரி, பெயின்டர், வெல்டர், தச்சு வேலை செய்பவர்கள், கிரேன் ஆபரேட்டர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம், டெல்லி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், கட்டுமான தொழிலாளர்கள் சிலருக்கு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இலவச பஸ் பாஸ்களை வழங்கி பேசியதாவது:
முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயனடைவர். டெல்லியில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அந்த 10 லட்சம் தொழிலாளர்களின் நலனுக்காக இதுவரை ரூ.600 கோடியை டெல்லி அரசு வழங்கியுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இவ்வளவு தொகை வழங்கப்பட்டதில்லை. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்காக இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பஸ் கட்டணத்துக்கு ஆகும் செலவை தொழிலாளர்கள் மாதம்தோறும் சேமித்து தங்களுடைய குடும்ப நலனுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Delhi , Free Bus Pass Scheme for Construction Workers: Introduction in Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...