உடுமலை நகராட்சி 33வது வார்டில் தெருவிளக்கு வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகளை வெட்ட கோரிக்கை

உடுமலை: உடுமலை நகராட்சியில் 33வது வார்டு பகுதியில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.நகர்ப்பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கும் போது, மரங்கள் இல்லாத பகுதிகளாகவும் மரங்கள் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளை வெட்டியும் விளக்குகளின் வெளிச்சம் வீதிகளில் விடும்படியும் செய்வது வழக்கம்.ஆனால் 33வது வார்டு உள்ள சௌத மலர் லே அவுட் பகுதியில் தெருவிளக்குகள் அனைத்தும் மரங்களின் இடையே அமைந்துள்ளது. அடர்ந்த மரக்கிளைகளின் காரணமாக வெளிச்சம் வீதியில் விழவே இல்லை. இதனால், அந்த வீதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவில் பெண்கள் தனியாக நடமாடுவதற்கு அச்சப்படும் சூழ்நிலை நீடிக்கிறது.

33வது வார்டு வழியாக எரிசனம்பட்டி, லட்சுமி நகர், கங்காதரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எந்நேரமும் போக்குவரத்து இருந்து உள்ளது. லட்சக்கணக்கில் தெரு விளக்கு அமைக்க செலவிட்டும், அதன் பயன் பொதுமக்களுக்கு கிடைக்காதது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மரக்கிளைகளை வெட்டி மின்விளக்கு வெளிச்சம் வீதியில் விழுமாறு செய்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட உதவிடும் படி கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: