சாம்பியன்ஸ் லீக் கால்பந்து; மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி பைனலில் ரியல் மாட்ரிட்

மாட்ரிட்: கிளப் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று அதிகாலை ஸ்பெயினின் மாட்ரிட் மைதானத்தில் நடந்த அரையிறுதி சுற்று 4வது போட்டியில், ரியல் மாட்ரிட் -மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணியின் ரோட்ரிகோ கோஸ் 90 மற்றும் 91வது நிமிடத்திலும், கரீம் பென்சிமா 95வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

மான்செஸ்டர் சிட்டி தரப்பில் ரியாத் மஹ்ரேஸ் 73வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஏற்கனவே மோதிய அரையிறுதி முதல் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி 4-3 என வென்றிருந்தது. 2 போட்டிகளின் முடிவில் 6-5 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. வரும் 28ம் தேதி பாரீசில் நடைபெறும் பைனலில் லிவர்பூல்-ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.

Related Stories: