×

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ்-டெல்லி மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 50வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் 2 போட்டியில் தோல்வியடைந்த  ஐதராபாத் அடுத்த 5  போட்டியில் வென்று அசத்தியது. கடைசி 2 போட்டியில் சென்னை, குஜராத்திடம் போராடி வீழ்ந்தது. இன்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பேட்டிங்கில் அபிஷேக் சர்மா(324 ரன்), மார்க்ரம்(263) திரிபாதி (228) வில்லியம்சன் (195) பூரன் (180) வலுசேர்க்கின்றனர். பவுலிங்கில் வேகத்தில் மிரட்டும் உம்ரான் மாலிக் 15, நடராஜன் 17 விக்கெட் எடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் வென்றால் பிளே ஆப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறலாம்.

மறுபுறம் டெல்லி 9 போட்டியில் 4ல் வெற்றி, 5ல் தோல்வி கண்டுள்ளது. பேட்டிங்கில் வார்னர் 7 போட்டியில் 264 ரன், ஷா 259 ரன் அடித்துள்ளனர். கேப்டன் ரிஷப் பன்ட் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. பவுலிங்கில் குல்தீப் யாதவ் (17) மட்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க இன்று வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியில் டெல்லி களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியதில் ஐதராபாத் 11, டெல்லி 9ல் வென்றுள்ளன. இந்த சீசனில் முதன்முறையாக சந்திக்கின்றன.

Tags : Sunrisers ,Delhi ,IPL , Sunrisers-Delhi clash in today's match of IPL series
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்