நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆட்டோ மீது மரம் சரிந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் போது, ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு இன்று மரத்தை அப்புறப்படுத்துவதற்காக பணிகள் நடைபெற்று வந்தன. விரிவாக்க பணியின் போது ஆலமரம் தோண்டப்பட்ட போது மரம் ஆட்டோவின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில ஆட்டோ டிரைவர் காதர் மற்றும் ஆட்டோவில் வந்த பெண் ரஹமத் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மரம் சரிந்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பெண் பயணி உயிரிழந்து பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்னறிவிப்பின்றி சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்வதாக பத்தமடை மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Stories: