×

பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு...4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் மருந்தக உரிமையாளர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் நாகராஜன் என்பவர் மருந்தகம் நடத்திவருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிலர் அடிக்கடி மாமூல் கேட்டு தகரில் ஈடுவதுவதாக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில், நேற்றுமுன் தினம் இதேபோல் நாகராஜனிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். அதனால், நாகராஜன் என்ன செய்வது என்று தெரியாமல்,  அந்த நபர்களின் தந்தைகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை கண்டித்து வைக்குமாறு கோட்டுக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் நாகராஜை பலமாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும் போதையிலிருந்த அவர்கள் நாகராஜின் பின் தலையில் கல்லால் தாக்கியதில் அவர் நிலைகுலைந்துபோகவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதனையடுத்து பக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்த நாகராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாகராஜன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து நாகராஜின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். அதனையடுத்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்தநிலையில், மாமூல் தர மறுத்த மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று 4 பேரை கைது செய்துள்ளனர். லாடபுரத்தில் சேர்ந்த பிரபாகரன், கார்த்திக், சுரேஷ் மற்றும் ரகுநாத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அஜித் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Tags : Latapuram ,Perambalur , 4 arrested for beating pharmacy owner to death at Ladapuram near Perambalur; One is headhunting
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...