×

எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை புறக்கணித்துவிட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புகார்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை புறக்கணித்துவிட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய Environmental Scientist வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2020-ம் ஆண்டில் எழுத்து தேர்வு நடந்துள்ளது.

இதில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் சிலரை நேர்முக தேர்வுக்கே அழைக்காமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய காலி பணியிடங்களை நிரம்பியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேர்காணல் நடத்த கூறி அணையிட்டும் அதிகாரிகள் அதனை மதிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தமிழக முதலமைச்சர் தலையிட்டு அதிமுக ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் கூறுகையில் எங்களது பட்டத்தில் M.sc Environmental Science என்பதற்கு பதிலாக M.sc Agriculture Environmental Science என உள்ளது என கூறி புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வாரம் மாசு கட்டுப்பட்டு வாரிய தலைவருடன் பேச முயற்சித்தும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்பதை அறிந்த அதிகாரிகள் அவசர அவசரமாக ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பணி நியமன பட்டியலை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Pollution Control Board , Written Examination, Pollution Control Board, Complaint
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...