×

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை தாக்கி அரசு பஸ் சேதம்

கோத்தகிரி : கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்  ஒற்றை காட்டு யானை தாக்கி அரசு பஸ் சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முள்ளூர் பகுதியில் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையில் நீண்ட நேரமாக அச்சுறுத்தியபடி ஒற்றை காட்டு யானை நின்றிருந்தது. பின்னர் அங்கும் இங்குமாக உலா வந்த நிலையில் திடீரென அரசு பஸ்சை நோக்கி ஓடி வந்து டிரைவரின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்களின் கண்ணாடியை தாக்கியது.

இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்துடன் மிகுந்த சத்தம் எழுப்பினர். தொடர்ந்து, பஸ் அருகில் நின்றிருந்த யானை, சிறிது நேரம் கழித்து வனப்பகுதியில் சென்று மறைந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் 3வது முறையாக அரசு பஸ்சை தாக்கியது காட்டு யானை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாக முள்ளூர் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kotagiri-Mettupalayam hill , Kothagiri, Mettupalayam, Government Bus,
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...