×

தமிழகத்தில் பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் பிரதமர், குடியரசு தலைவர் படத்தை வைக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: தமிழகத்தில் பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் படத்தை வைக்க கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜக-வினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக கோவையில் உள்ள பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜக-வினர் வைத்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அந்த சம்பவம் குறித்து  பா.ஜ.கவினர் மீது பூலுவப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.  

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் படத்தை வைக்க கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : President of the Republic ,Panchayat ,Tamil Nadu ,I Court , The case of the Prime Minister and the President of the Republic seeking to keep the picture in the Panchayat offices and ration shops in Tamil Nadu is being heard in the I Court today
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...