திருத்தணி முருகன் கோயிலில் இன்று தொடக்கம் சித்திரை பிரமோற்சவ விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரைமாத பிரமோற்சவம் வெகுவிமர்ச்சையாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த, 2020ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை சித்திரை மாத பிரமோற்சவம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், நாளை (5ம் தேதி) சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இம்மாதம், 12ம் தேதி தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்: இன்று கொடியேற்றம் -கேடய உலா, நாளை வெள்ளி சூரியபிரபை பூதவாகனம், மே 7ம் தேதி சிம்ம வாகனம் -ஆட்டு கிடாய் வாகனம், 8ம் தேதி பல்லக்குசேவை வெள்ளி நாகவாகனம், 9ம் தேதி அன்னவாகனம் வெள்ளிமயில் வாகனம், 10ம் தேதிமாலை 4:30 மணி- புலி வாகனம் யானைவாகனம், 11ம் தேதி இரவு 7:00 மணி  தங்கத்தேர், 12ம் தேதி யாளி வாகனம் தெய்வானை திருக்கல்யாணம், 13 ம் தேதிகேடய உலா சண்முகர் உற்சவம், 14ம் தேதி தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம்கொடி இறக்கம்,  15ம் தேதி சப்தாபரணம், காதம்பரி விழாவுடன் நிறைவடைகிறது.

Related Stories: