×

பெரம்பூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதைையொட்டி, கடந்த மாதம் 24ம் தேதி காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை மண்ணடியில் கூழ்வார்த்தல், கிராம தேவதை செல்லியம்மனுக்கு பொங்கல்  வைத்தல் நிகழ்ச்சியும், 3ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மகா கணபதி பூஜை, மண்டப அலங்காரம், மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம், மாலை 6 மணிக்கு யாகசாலை பிரவேசம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடந்தது.  

நேற்று காலை 9 மணிக்கு திருக்கடம் புறப்பாடு நிகழ்வும் பின்னர் 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீரை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலை வலம் வந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், மகாதீபாராதனையும், அன்னதானமும், மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு திரவுபதி அம்மன் உற்சவர் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதியுலா நடந்தது. நிகழ்வில், கோயில் நிர்வாகிகள் எல்.ரஜினி, தசரதன், வாசுதேவன், பொன்முடி, ஞானமுத்து, மாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Fluvupati Amman Temple Kumbaphishekam ,Perampur Village , Uthukkottai,Draupadi Amman Temple,Kumbaabheysyam
× RELATED மயிலாடுதுறை அருகே பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்