×

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்: பைனலில் லிவர்பூல்

வில்லாரியல்:  யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில்  இங்கிலாந்தின் லிவர்பூல் 10வது முறையாக இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது. ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் 2வது சுற்று  ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஸ்பெயினின் வில்லாரியல்  நகரில் நேற்று நடந்த  அரையிறுதி 2வது சுற்றின் முதல் ஆட்டத்தில்   வில்லாரியல்(ஸ்பெயின்), லிவர்பூல்(இங்கிலாந்து) அணிகள் மோதின.

வில்லாரியலின் சொந்த மண்ணில் ஆட்டம் நடந்தாலும்  லிவர்பூல் தான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில்  டியா, 41வது நிமிடத்தில்  காகுலின் ஆகியோர் கோல் அடித்தனர். அதனால் முதல் பாதி முடிவில்  வில்லாரியல் 2-0 என்ற  கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. ஆனால் 2வது பாதியில் ஆட்டம் தலைகீழானது.  லிவர்பூலின்  பேபின்ஹோ 62நிமிடத்திலும்,  லூயின்  டியல் 67வது நிமிடத்திலும், மானே 74வது நிமிடத்திலும்  கோல் அடித்தனர். இடையில் வில்லாரியல் வீரர்கள் எத்தனை முயன்றும் கோலடிக்க முடியவில்லை. அதனால் லிவர்பூல்  3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

ஏற்கனவே லிவர்பூலில் நடந்த  அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்திலும் லிவர்பூல் 2-0  என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. எனவே மொத்த கோல்களின் அடிப்படையில் லிவர்பூல் 5-2 என்ற  கோல் கணக்கில் வென்று 10வது முறையாக  இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

Tags : UEFA Champions League ,Liverpool , UEFA Champions League, Final, Liverpool
× RELATED சில்லிபாயின்ட்..