மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

சென்னை: மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை சமூகநிதித்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் சிறப்பு விருந்தினராக  சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளையும், புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்பதையும், திறம்படவும், நேர்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இணை இயக்குநர்கள் ராஜா சரவணகுமார், தனசேகரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: