×

அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை

சென்னை: வேளாண்மை திட்டங்களுக்கான நிதி நிலை குறித்து துறை அதிகாரிகளுடன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.  சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும்  துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான சான்று விதை கையிருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. மேலும், நெல் சாகுபடிக்கு தேவையான சான்று விதைகளைகுறைவு இல்லாமல் தேவையான அளவு கையிருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது….

The post அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,M. R.R. K.K. Bannir ,Chennai ,M. R.R. K.K. Bunneer ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...