×

இலங்கையில் புதுமுகங்கள்

இலங்கை  கிரிக்கெட் அணியின் வீரர்கள்  சென்னை, பெங்களூர், பஞ்சாப் என  ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். அதனால்  வங்கதேசத்தில் இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளள உள்ள  இலங்கை அணியில் கமில் மிஷாரா, கமிந்து மெண்டீஸ், தில்ஷன் மதுஷங்கா, சுமிந்தா லக்‌ஷன் என புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸி தொடர் நடக்குமா?: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்பி போராட வேண்டும்’ என்று முன்னாள் கேப்டன் அர்ஜூன் ரணதுங்க வலியுறுத்தினார். யாரும் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில்  இலங்கை அணி இந்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாட  வங்கதேசம் செல்கிறது.  தொடர்ந்து அடுத்த மாதம் ஆஸி அணி  இலங்கை செல்கிறது. அங்கு ஜூன் 7 முதல்  ஜூலை 12வரை  3 டி20, 5ஒருநாள், 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இப்போது அங்கு நிலவும் நெருக்கடியான சூழலில்  தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  அதற்கு இலங்கை கிரிக்கெட் சங்க நிர்வாகி மோகன் டி சில்வா ‘ நிலைமையை கவனித்து வருகிறோம். ஓரிரு நாட்களுக்கு பிறகு முடிவை அறிவிப்போம் ’என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளருக்கு தடை: பொதுவாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆங்கில  ஊடகம் என்றால் 32பற்கள் தெரிய பேட்டிக்கு தலை ஆட்டுவார்கள். என்ன அதிசயமோ கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாகா சில மாதங்களுக்கு  போரியா மஜும்தார் என்ற ஆங்கில பத்திரிகையாளருக்கு பேட்டிதரவில்லை. அதனால் இருவருக்கும்   தகராறு.  தன்னை ‘மெசேஜ்’ மூலம் மிரட்டியதாக விருத்திமான் புகார் அளித்தார். அதை விசாரித்த  பிசிசிஐ,   2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க போரியாவுக்கு நேற்று தடை விதித்தது.

அவ்வளவுதான் வாழ்க்கை- கோஹ்லி: பெங்களூர் அணி வீரர் விராத் கோஹ்லி, ‘2008ல் யு19 உலக கோப்பை வென்ற அணியில் இருந்த  எனக்கு ஐபிஎல்தான் புதிய கதவுகளை திறந்து விட்டது. உலகின் முன்னணி வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு, இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புகளை உருவாக்கி தந்தது.   என்னை எந்த அணியும் நம்பாத போது, பெங்களூர் அணி என்னை நம்பியது. பெங்களூர் அணியுடனான எனது விசுவாசம் என்பது,  என் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை புரிந்துக் கொள்வதில் உள்ளது.  நீங்கள் நல்லவராக இருந்தால், உங்களை  மக்கள் விரும்புவார்கள். அப்படியில்லை  என்றால் விலகியிருப்பார்கள். அவ்வளவுதான் வாழ்க்கை. தொடர்ந்து 5 நிமிடங்கள் நன்றாக உணரலாம். ஆறாவது நிமிடத்தில் நிலைமை பரிதாபமாக மாறாலாம். அதனால் என் வாழ்க்கை அங்கு முடிந்து விடாது’ என்று நேற்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

4 ஆண்டு சிறை: பாலியல் வன்கொடுமை வழக்கில்  ஸ்பெயின் கால்பந்து வீரர் சான்தி மினாவுக்கு (26)   ஸ்பெயின்  நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு 2017 முதல் நடந்து வந்தது.

Tags : Sri Lanka , Sri Lanka, Newcomers, Cricket
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...