×

விலை வீழ்ச்சியால் கொடைக்கானலில் மலைப்பூண்டுகள் விற்பனையாகாமல் தேக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விற்பனையாகாமல் டன் கணக்கில் பூண்டுகள் தேக்கமடைந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட பூண்டு வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கொடைக்கானல் பூண்டு விவசாயிகளின் பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.

அதன் பின்னர் பூண்டு விலை ஒரே சீராக முதல் ரகம், இரண்டாம் ரகம் என தரத்தின் அடிப்படையில் ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பூண்டு விவசாயத்தை மலைக்கிராம விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது மலைப்பூண்டு விலை படு வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.

இதனால் தாங்கள் சாகுபடிக்கு செலவழித்த  வகைகளுக்கு கூட முதல் கிட்டவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் உரிய விலை கிடைக்காததால் குடோன்களில் பூண்டு மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. எனவே பூண்டு விவசாயிகள் நலன் கருதி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலைப்பூண்டு மொத்த கொள்முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்து தர தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kodaikanal , Garlic sales in Kodaikanal stagnate due to falling prices
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்