சிவகிரி அருகே உள்ளார் அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: அக்னிகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிவகிரி: சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளார் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா  கடந்த ஏப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 7ம் நாளில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்நிலையில் பூக்குழி திருவிழா தினத்தையொட்டி கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் புனித விரதமிருந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், கைக் குழந்தைகளுடன் ஊரைச் சுற்றி வலம் வந்து பூக்குழியில் இறங் கினர். கோயில் பூசாரி காளிப்பனை தொடர்ந்து பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்.

விழாவில் யூனியன் சேர்மன் பொன்.முத்தையா பாண்டியன், கவுன்சிலர் முனியராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தலைவர் ரமேஷ், நாட்டாண்மை கருப்பசாமி பாண்டியன், செயலாளர் அந்தோணி துரை, பொருளாளர் முத்துகாளை, தினேஷ் குமார் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட முளைப்பாரி உள்ளார் மேற்கு ஆற்றல் இரவில் கரைக்கப்பட்டது. 10ம் திருநாளையொட்டி இன்று காலை மஞ்சள் நீராட்டும், இதைத்தொடர்ந்து அன்னதானமும்  நடக்கிறது.

Related Stories: