ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

கோத்தகிரி:  ஊட்டி மலைப் பாதையில் கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஐதராபாத்திலிருந்து ஊட்டிக்கு நந்தகோபால் என்பவர் தனது உறவினர்கள் 12 பேருடன் வேனில் சுற்றுலா வந்தார். வேனை தங்க வேல் மணி ஓட்டினார். 2 நாட்கள் ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவையை நோக்கி நேற்று வேனில் புறப்பட்டனர். கோத்தகிரி  கொட்டக்கொம்பை பகுதியில் வந்தபோது வேனின் பிரேக் பழுதாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாக வேண்டிய வேனை டிரைவர் சாதுரியமாக வலதுபுற சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தினார்.

இதில் வேன் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் வேனில் பயணித்த ஸ்ரேயா சிணானி, சிரியா, சரிதா,ரிஷி, லக்ஷ்மி ராமன் ஆகிய 5 பேர்  படுகாயம் அடைந்தனர். அவர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: