படப்பிடிப்பிலிருந்து நடிகர் சூர்யா வெளியேறினாரா?.. தயாரிப்பாளர் விளக்கம்

சென்னை: பாலா இயக்கும் படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகர் சூர்யா வெளியேறியதாக தகவல் பரவியது. ஆனால் இதை பட தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. பாலா இயக்கும் படத்தை தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து சூர்யா நடித்து வருகிறார். படத்துக்கு பெயரிடவில்லை. இதில் சூர்யா ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதையடுத்து சூர்யா படப்பிடிப்பிலிருந்து வெளியேறி விட்டதாகவும் சிலர் தகவல் பரப்பினர்.

இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, ‘கடந்த 33 நாட்கள் கன்னியாகுமரியில் சூர்யா - பாலா படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து கோவாவில் அடுத்த ஷெட்யூல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே சிலர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்னை என வதந்தி கிளப்புகிறார்கள். இதில் துளியும் உண்மையில்லை’ என்றார்.

Related Stories: