×

பெண் எஸ்பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்‍கு: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், பாதிப்பட்ட பெண் எஸ்.பி. ஆஜராக ஆணை..!!

விழுப்புரம்: பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் எஸ்.பி கண்ணன், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வந்த ராஜேஷ்தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, ராஜேஷ்தாஸ் மற்றும் கண்ணன் ஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களை  கொண்ட குற்றப்பத்திரிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜீலை மாதம் 29ம் தேதி தாக்கல் செய்தனர். செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் மூவரும் ​மீண்டும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : DGP ,Rajesh Das , Female SP., Sexual harassment, DGP Rajesh Das
× RELATED பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை...