×

திருத்துறைப்பூண்டி கூட்டுறவு வங்கி கிளையில் சேதமடைந்த ஜன்னல் கண்ணாடி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கஜா புயலில் சேதமான ஜன்னல் கண்ணாடியை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்துறைப்பூண்டி ஆஞ்சநேயர் கோயில் எதிரில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி திருத்துறைப்பூண்டி கிளை இயங்கி வருகிறது. பாரம்பரிய வங்கி ஆகும். இந்த வங்கியில் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள 26 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கதில் உள்ள விவசாயிகள் நகை கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.50 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வங்கிக்கு விவசாயிகள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு கஜா புயலில் கட்டிடத்தில் உள்ள ஜன்னல் பகுதியில் கண்ணாடி சேதமடைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை அதனை சீரமைக்கவில்லை.

உடைந்த கண்ணாடி துண்டுகள் அந்த பிரேம்களில் அப்படியே உள்ளது நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்ற நிலையில் அந்தக் கண்ணாடிகள் எப்போது வேண்டுமானாலும் கீழே வந்து செல்கின்றவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.இது குறித்து கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் அதிகாரிகள் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி திருத்துறைப்பூண்டி கிளையை பார்வையிட்டு சேதமான பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruthuraipoondi ,Co , திருத்துறைப்பூண்டி கூட்டுறவு வங்கி கிளையில் சேதமடைந்த ஜன்னல் கண்ணாடி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
× RELATED திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்கம்