ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.108 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு :அமைச்சர் சேகர்பாபு

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரையின்படி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம், அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 11 நிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டு மீண்டும் அறக்கட்டளை வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சுமார் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த 46 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது முதற்கட்டமாக 22 ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதற்கு பட்டிபுலம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு புறமாக பன்னை வீடுகளாகவும், பொழுதுபோக்கு விடுதிகளாகவும், தோட்டங்களாகவும், அதில் மதிற் சுவர் ஏற்படுத்தியும் அனுகு பாதை அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்து வந்த இடங்களையும் சாலுவான்குப்பம் கிராமத்தில் இறால் குஞ்சு பொறிப்பகம் உணவகம், பேக்கிரி, மதிற் சுவர்கள் மற்றும் அனுகு பாதை சாலை அமைத்தும் (17.90 ஏக்கர்) நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறக்கட்டளை வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.

மேற்படி ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 108 கோடி ரூபாய் ஆகும். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அரசு நிதி மூலம் சுமார் ரூபாய்.10.50 கோடி (பத்துக்கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்) மதிப்பிட்டில் மதிற் சுவர்கள் அமைக்க அரசாணை பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.இந்த நிகழ்வின்போது, அறக்கட்டளை செயல் அலுவலர் சிறப்பு பணி செயல் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: