கொடைக்கானலில் மலைப்பூண்டின் விலை திடீர் வீழ்ச்சி; அடுத்தகட்ட நடவு பணிகளை செய்ய முடியவில்லை என விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் விளைவித்த பூண்டுகளை தேக்கி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மருத்துவகுணம் மிக்க பூண்டு வகைகள் அதிகள் விளைவிக்கப்படுகின்றன. கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விலை போகும் பூண்டு, தற்போது வீழ்ச்சி அடைந்து ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விற்பனை ஆகி வருகின்றது.

செலவழித்த தொகையை கூட எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விளைவித்த பூண்டுகளை அறுவடை செய்து கிடங்கில் தேக்கி வைத்துள்ளதாகவும், இதனால் அடுத்த கட்ட நடவுப்பணிகளை செய்யமுடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். பூண்டு விற்பனைக்கென மொத்த கொள்முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Related Stories: