திருப்பூரில் அனைத்து தரப்பினரையும் பிரமிக்க வைக்கும் குகை மீன்கள் கண்காட்சி

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் பிரகல்யா விஷன் சார்பில் குகை மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி கடந்த 21ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு பொருட்காட்சி தொடங்குகிறது. இதில் குகை மீன்கள் கண்காட்சி முக்கிய அம்சம். பொருட்காட்சிக்குள் நுழைந்ததும் குளிர்சாதன வசதி உள்ள குகை மீன்கள் கண்காட்சி அரங்குக்குள் செல்ல வேண்டும். இங்கு 80 தொட்டிகளில் விதவிதமான வண்ண மீன்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் கடல் நீர் நிரப்பப்பட்டு ஜெயின் கவுரம், டைகர் அஸ்கரவ், செல்பினி, வாஸ்து மீன் என 80-க்கும் மேற்பட்ட மீன் வகைகளை கண்டுரசிக்க முடியும்.

இதை கடந்து சென்றால் 200 அடி நீளமுள்ள கண்ணாடி குகைக்குள் மேற்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி கண்ணாடியால் ஆனது. ராட்சத அளவிலான மீன்கள் அங்குமிங்கும் நீந்துவதை அருகில் இருந்து பார்த்து அதிசயிக்க வைக்கிறது. வெளிநாடுகளில்தான் இதுபோன்ற அரங்கு இருக்கும். மின்னொளியில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துவது கண்களை கவருவதாக உள்ளது. 3 அடி நீளம் வரை பிரானா வகை ராட்சத மீன்கள் தலைக்கு மேல் நீந்துவதை பார்ப்பது பிரமிப்பாக உள்ளது. குறிப்பாக அரப்பைனா என்ற வகை மீன்கள் தெற்கு அமெரிக்காவில் நீர்நிலைகளில் காணப்படுகிறது. இந்த மீன் இரண்டரை அடி முதல் 3 அடி நீளம் கொண்டதாக உள்ளன.

மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுனாமி, கொலம்பஸ் போன்ற விளையாட்டுகளும், ஜெயண்ட் வீல் போன்ற 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அம்சங்கள் உள்ளன. பாப்கார்ன், ஸ்வீட் கான், ஐஸ்கிரீம், டெல்லி அப்பளம் போன்றவை உள்ளன. அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க வசதியாக அமைந்துள்ளது. இதுகுறித்து பிரகல்யா விஷன் உரிமையாளர் கனகராஜ் கூறும்போது, ‘‘குகை மீன்கள் கண்காட்சியில் வெளிநாடுகளில் உள்ள மீன்களை அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த குகை மீன்கள் கண்காட்சி சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை கவர்ந்து வருகிறது. ஜூன் வரை நடைபெறும்’’ என்றார்.

Related Stories: