×

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இரட்டையர்கள் அதிகம் வாழும் அதிசய கிராமம்!: குழந்தை முதல் பெரியவர்கள் வரை இரட்டையர்களாக காட்சியளிப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அதிசய கிராமம் ஒன்றில் அதிகளவில் இரட்டையர்கள் வளம் வருவது வியக்க வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த அங்காடிமங்கலம் கிராம மக்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் திருப்புவனம் நகருக்கே வந்து செல்கின்றனர். இரண்டு மாவட்ட எல்லையில் உள்ள இந்த கிராமத்தை அனைத்து தரப்பினரும் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒரு இரட்டையர் வளம் வருவதே அதற்கு காரணம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தாலும் அனைத்து சமுதாயத்திலும் இரட்டைகள் உள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கு ஆய்வு மேற்கொண்டதாக கூறும் அப்பகுதி மக்கள், சுமார் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இக்கிராமத்தில் உள்ளதாக தெரிவித்தனர். பெரும்பாலும் இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் ஆடை, காலணி உள்ளிட்டவை வாங்கி கொடுப்பதால் அவர்களது பெற்றோர்களால் மட்டுமே அடையாளம் காணும் நிலை உள்ளது.

இதனால் சினிமாக்களில் இரட்டையர் கதாபாத்திரங்கள் மூலம் நடக்கும் நகைச்சுவையான குழப்பங்கள் போன்றே தங்களது கிராமத்திலும் நடந்த கதை உண்டு என புன்னகையுடன் கூறுகின்றனர் அங்காடிமங்கலம் கிராம மக்கள். தொடர்ந்து மேலும் இரட்டை குழந்தைகள் பிறந்து வருவதால் அங்காடிமங்கலம் கிராமத்தில் இரட்டையர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Sivagangai District ,Thiruppuvanam , Turnaround, Twins, Wonder Village
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...