வால்பாறை பெரியார் நகரில் தடையின்றி கிடைக்கும் குடிநீர்: மக்கள் மகிழ்ச்சி

வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ளது பெரியார் நகர். சோலையார் அணை கரையோரம் உள்ள  இந்த பகுதியில் சுமார் 100 குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஒரு வருடமாக இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகளின்போது தண்ணீர் குழாய் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தண்ணீர் முறையாக வீடுகளுக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நீர் ஊற்றுகளில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் அப்பகுதி கவுன்சிலர் சத்தியவாணி முத்து புகார் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று ஆய்வு செய்து, பணிகளை செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது பணிகள் முடிக்கப்பட்டு வீடுகள்தோறும் தண்ணீர் சென்றடைகிறது. எனவே அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளிக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Related Stories: