×

நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க.. ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை :தமிழகத்தில் நாளை தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

அதே போல், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுவையில்  நாளை தொடங்கும்  12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் சுமார் 18 லட்சம்  மாணவ, மாணவியருக்கும்  எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த இரு பொதுத்தேர்வுகள் தான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக அமையக்கூடியவையாகும். ஆகவே  வழக்கமான தேர்வுகளை விட இந்தத் தேர்வுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்; கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்! 10, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது தான் முதல் பொதுத்தேர்வு என்பதால் பதற்றம் தேவையில்லை. கவனச் சிதறல்கள் இல்லாமல் தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்களை பெற்று வாழ்க்கையில் சாதிக்க  மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,நம் மாணவச்செல்வங்கள் நல்ல உயர்கல்வி பெற்று, தங்களுடைய வாழ்க்கையில் உன்னத நிலைகளை அடைய, இப்பள்ளிப் பருவ பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் நம் மாணவச்செல்வங்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றியடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : stalin , Plus 2, students, principal, MK Stalin, leaders, greetings
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...