×

இந்தியா வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது: மன்னார் போலீசார் விசாரணை

மன்னார்: இந்தியா வர முயன்றதாக 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது தொடர் நிகழ்வாக நிகழ்ந்து வருகிறது. மார்ச் 22-ம் தேதியில் இருந்து தற்போது வரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மண்டபம் மறுவாழ்வு முகாமில் அதிகாரிகள் தங்க வைத்து, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இலங்கையில் இருந்து பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, டீசல்-பெட்ரோல் விலை உயர்வு மற்றும் மின்சேவை தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அங்கு வாழ இயலாத நிலை உள்ளதாக கூறி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மன்னார் பகுதியில் இருந்து ஒரு படகு மூலமாக 14 பேர் ராமேஸ்வரத்திற்கு வர முற்பட்டபொழுது, பேசாலை கடல்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் அவர்களை  சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட 14 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 14 பேரில் 5 பெண்கள், 5 சிறுவர்கள் மற்றும் 4 ஆண்கள் உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டது.             


Tags : Tamils ,India , India, Sri Lankan Tamil, arrested, Mannar police, investigation
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்