×

இலங்கை பொருளாதார நெருக்கடி; முதல்வரின் வேண்டுக்கோளை ஏற்று ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் அறிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.

இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது என நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தச் சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய தருணம் இது.

எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார். இதையடுத்து இன்று தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Sri Lanka ,Temujin ,Vijayakanth ,chief minister , Sri Lanka, economic crisis, Rs 5 lakh, relief, Vijayakand
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...