×

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை

சென்னை: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகல் அவரச ஆலோசனை நடத்த உள்ளார். சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரம், மருத்துவக் கழிவுகளை கையாள்வது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் உரிய விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக அனைத்து மருத்துவ கல்லூரி டீன்கள் மற்றும் இணை இயக்குனர்களை சென்னைக்கு வரும்படி அவசர அழைப்பு அனுப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறி டீன் ரத்தினவேல் காத்திருபோர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி விளக்கம் அளித்த மாணவர்கள், சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி ஏற்கவில்லை. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சிலர் வெளியிட்டுள்ள ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழியைத்தான் நாங்கள் எடுத்து கொண்டோம் என விளக்கம் அளித்தனர்.


Tags : Minister ,Ma Subramaniam ,Deans ,Government Medical College , Sanskrit, Pledge, Controversy, Ma. Subramanian, Advice
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...