இந்திய பெண்கள் தங்களது கணவரை விட்டுத் தர மாட்டார்கள் : அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

அலகாபாத் : இந்திய பெண்கள் தங்களது கணவரை விட்டுத் தர மாட்டார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சுசில் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இது தெரியவந்ததும், இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளித்து விட்டு, விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் சுஷில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சுசில் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மனைவி தற்கொலைக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் தங்களை விடுவிக்குமாறும் குற்றச்சாட்டை மறுத்து சுசில் குமார் தாக்கல் செய்த மனு, விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, சுசில் குமார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்தியப் பெண்கள், கணவர் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைக்கின்றனர். இரண்டாவது மனைவியாக இருந்தாலும் இதே எண்ணம் இருக்கும். இந்திய பெண்கள் தங்களது கணவரை விட்டுத் தர மாட்டார்கள். வெளிநாடுகளை ஒப்பிடும் இந்தியப் பெண்கள் தங்கள் கணவர்கள் மீது அதீத அன்பை வைத்துள்ளனர். சுஷில் குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரது 2வது மனைவி மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இதற்கு மனுதாரர் காரணம் என்பதால், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.  எனவே இந்த வழக்கில் அவரை விடுதலை செய்ய முடியாது. சுசில் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம், என்று கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: