×

4 விக்கெட் சாய்த்தார் ரபாடா குஜராத் டைட்டன்சை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்: சுதர்சன் அரை சதம் வீண்

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட் செய்தது. சாஹா, கில் இருவரும் குஜராத் இன்னிங்சை தொடங்கினர். கில் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். சாஹா 21 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் 7 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த... மில்லர், திவாதியா தலா 11 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ரஷித் கான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். சங்வான் 2, பெர்குசன் 5 ரன் எடுத்து அணிவகுத்தனர். உறுதியுடன் போராடிய சுதர்சன் அரை சதம் அடித்தார். குஜராத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. சுதர்சன் 65 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), அல்ஜாரி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 4, அர்ஷ்தீப், ரிஷி தவான், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஷிகர் தவான் அதிகபட்சமாக 62 ரன் (53 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பானுகா ராஜபக்சே 40 ரன், லிவிங்ஸ்டன் 30 ரன் எடுத்தனர். குஜராத் பந்துவீச்சில் முகமது ஷாமி, பெர்குசன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பஞ்சாப் கிங்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Tags : Rabada ,Gujarat Titans ,Punjab Kings ,Sudarson , Punjab Kings beat Rabata Gujarat Titans by 4 wickets: Sudarshan loses half century
× RELATED லக்னோ அபார வெற்றி