×

தமிழகத்தில் நடக்கும் பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வெழுத நிரந்தர தடை: தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் அடுத்தடுத்து வரும்  தேர்வின்போது மாணவர்கள் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அது வருமாறு:
* புத்தகங்கள் கையேடுகள், கையெழுத்து பிரதிகள் வைத்திருந்து கண்டுபிடிக்கும் போது அன்றைய தேர்வு மாணவர் எழுத முடியாதபடி ரத்து செய்யப்படும். அல்லது அடுத்த 1 அல்லது 2 பருவத்தேர்வுஎழுத தடை விதிக்கப்படும்.
* மற்ற மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினாலோ, வெளியில் இருந்து பெற்றது கண்டறியப்பட்டால், எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தேர்வு மையத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். ஓராண்டு அல்லது அடுத்த இரண்டு பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
* தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு உதவி பெற நிர்ப்பந்தித்தால் அந்த பருவத் தேர்வு தடை செய்யப்பட்டு  குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்
படும்.
* ஆள்மாறாட்டம் செய்தால், அந்த பருவத் தேர்வு  ரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
* விடைத்தாளில் தவறான வார்த்தைகள் எழுதினாலோ, மதிப்பெண் போட வேண்டும் என்று  கடிதம் எழுதி இருந்தால், குறிப்பிட்ட பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
* தேர்வு அறை கண்காணிப்பாளரிடம்  தவறாக நடந்து கொண்டால் (திட்டுதல்  தாக்குதல்), தேர்வு அறையில் வெளியேற்றப்படுவதுடன், பிற பாடத் தேர்வுகளையும் எழுத தடை விதிக்கப்படுவார்கள், அல்லது நிரந்த தடை விதிக்கப்படும்.
* விடைத்தாள்களை தேர்வு அறைக்கு வெளியில் எடுத்து செல்வது அல்லது அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றாலோ, விடைத்தாளை கிழித்தாலோ எச்சரிக்கப்பட்டு, அந்த தேர்வு ரத்து செய்யப்படும்.
* கேள்வித்தாளை வெளியில் அனுப்பினால், தேர்வு ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ரத்து செய்யப்படும்.
*  விடைத்தாளின் உள்ளே, வெளியே சிறப்பு குறியீடுகள் எழுதினால், மாணவரிடம் விளக்கம் பெற்ற பிறகு  எச்சரிக்கை அல்லது அந்த பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
* கேள்வித்தாளில் விடை எழுதி அதை பிற மாணவர்களுக்கு  வழங்கினால், அந்த பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.

Tags : Tamil Nadu ,Election Department , Permanent ban on impersonation in general elections in Tamil Nadu: Election Department warning
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...