அலிகர் என் அடையாளம்! ரிங்கு சிங் பெருமிதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் (24 வயது) 23 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட  42 ரன் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். முன்னதாக, பீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 2 முக்கிய கேட்ச்களை பிடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்ற ரிங்கு சிங் கூறியதாவது: உத்தர பிரதேசம் அலிகரில் இருந்து நிறைய வீரர்கள் ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் விளையாடி உள்ளனர். ஆனால், ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அலிகர் வீரர் நான்தான். இது மிகப் பெரிய லீக். அதற்கேற்ப நெருக்கடியும் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ‘வாய்ப்பு கிடைக்குமா’ என்று காத்திருந்தேன். கடினமாக உழைத்து, காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்நாட்டு தொடர்களில் நன்றாக விளையாடினேன். இந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்யும் போதும் சக வீரரான சகோதரர் நிதீஷ் ராணா, பயிற்சியாளர் ‘பாஸ்’ பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடிக்க வேண்டும்  என்று சொன்னார்கள். அதன்படியே செய்தேன். இவ்வாறு ரிங்கு கூறியுள்ளார்.

Related Stories: