பாரா டேபிள் டென்னிஸ் தமிழக வீரருக்கு தங்கம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. அதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ்  மேம்பாட்டு சங்கம் சார்பில் 13 பேர் கலந்து கொண்டனர். அதில் தமிழக வீராங்கனை பேபி சஹானா ‘கிளாஸ்-9’ பிரிவிலும், தமிழக வீரர் ராஜ் அரவிந்தன் ‘கிளாஸ்  5’ பிரிவிலும் தங்கம் வென்றனர். ‘கிளாஸ் 1’ பிரிவில் ஜே.டி.மதன்  வெள்ளியும், ‘கிளாஸ் 3’ பிரிவில் டாக்டர் பாரதி வெண்கலமும் வென்றுள்ளனர்.

Related Stories: