நடிப்புதான் நிறைய கற்றுக்கொடுத்தது: சொல்கிறார் இயக்குனர் செல்வராகவன்

சென்னை: விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் நடிகராக அறிமுகமானவர், இயக்குனர் செல்வராகவன். தற்போது ‘சாணிக் காயிதம்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 6ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது: நான் இயக்குனராகப் பணியாற்றும்போது, நேரத்தைப் பார்த்து வேலை செய்யக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தேன். செய்யும் பணியில் முழு கவனத்துடன் ஈடுபடும்போது நேரம் போவதே தெரியாது. படப்பிடிப்பில் அனைத்து விஷயங்களும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான், ஷூட்டிங்கை பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்றுதான் நான் முதலில் நினைத்து இருந்தேன். ஆனால், அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதாக இருந்தது. பொறுமையாக இருந்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேசுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

Related Stories: