ஒரே பாடலில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடனம்

ஐதராபாத்: தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் படம், ‘காட்பாதர்’. இது மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். சிரஞ்சீவி, நயன்தாரா, சத்யதேவ், இயக்குனர் புரி ஜெகன்நாத் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை. கடந்த மாதம் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். இதையடுத்து பிரபுதேவா நடனப் பயிற்சி அளிக்கும் ஒரு பாடல் காட்சியில் சிரஞ்சீவி, சல்மான்கான் இணைந்து ஆடுகின்றனர். விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: