பெரம்பூர் ரயில் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிரா ஆசாமி கைது

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஷால் ஹிரே நேற்று முன்தினம் (2ம் தேதி) இரவு 9 மணிக்கு சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்மலா காவல் நிலையத்தில் குற்றவழக்கில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அகமத் அன்சாரி என்பவர் மும்பை - எழும்பூர் (22157) விரைவு ரயிலில் பயணம் செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து தனிப்பிரிவு ஆய்வாளர் மூலம் சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில்வே காவல் நிலையங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடை 1ல், மேற்கண்ட நபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவரிடம் இருந்த ரூ.2.42 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளியை மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் ரயில்வே போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

Related Stories: