மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி: விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு, இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு கல்வித்தகுதி (10, +1, +2) உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்கள் ஆகிய துறையில் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். குழந்தை சார்ந்த பணிகளில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  மாத தொகுப்பூதியம் ரூ.14,000. புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு கல்வித்தகுதி 10 / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் சார்ந்த பணிகளில் ஓராண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.  மாத தொகுப்பூதியம் ரூ.8,000.

இந்த பணியிடங்களுக்கு தகுதிகளை பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் www.kancheepuram.nic.in என்ற வளைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, கேடிஎஸ் மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம்  631502 தொலைபேசி எண்: 044-27234950 என்ற முகவரியிலும், பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவவர்கள் தங்களது விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: