மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: ஆண்கள் மட்டும் பங்கேற்கும் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடத்தப்பட உள்ளதாக, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி 2021 - 2022ம் ஆண்டுக்கு வரும் 7ம் தேதி காலை 9 மணிக்கு செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது, போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் வரும் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரம் பெற 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டல போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: